" alt="" aria-hidden="true" />
அ.ம.மு.க 3ம் ஆண்டில் எதிரிகளின் சூழ்ச்சியை முறியடித்து 2021 ஆட்சி அமைக்க சூளுரையேற்போம் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வாழ்த்து செயதியில் கூறி உள்ளதாவது
புரட்சி தலைவி அம்மா அவர்களும், தியாக தலைவி சின்னம்மாவும் அதிமுக எனும் கட்சியை தங்களது உழைப்பால், தியாகத்தால் பல்வேறு சூழ்ச்சிகளுக்கு இடையே மாபெரும் இயக்கமாக உருவாக்கினர். அம்மா மறைவுக்கு பின், தியாக தலைவி சோதனை அனுப்பவித்து வரும் இந்த காலகட்டத்தில் துரோகிகளின் கையில் அதிமுக சிக்கி சின்ன பின்னமாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலை இன்று பல தோல்விகளை சந்தித்து வருகிறது. எதிரிகளிடம் இருந்து அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் செல்வர் அவர்கள் துவங்கினார்கள். மத்திய ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டு தமிழக மக்களுக்கு எண்ணற்ற இன்னல்களையும், துன்பத்தையும், துயரத்தை ஏற்படுத்தி வரும் இன்றைய ஆட்சியாளர்களிடமிருந்து தமிழக மக்களை காப்பாற்ற போகும் மாபெரும் இயக்கமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தற்போது உருவெடுத்துள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழக வாக்காளர்கள் உருவாக்கியுள்ளனர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அழித்து விட வேண்டும், ஒழித்து விட வேண்டுமென துடித்து கொண்டிருக்கும் துரோகிகளையும், எதிரிகளையும் 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் வீழ்த்தி, மக்கள் செல்வர் தலைமையில் ஆட்சி அமைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக 3ம் ஆண்டில் அனைவரும் சூளுரைப்போம். என கூறி உள்ளார்.