சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சமடைந்தது.
தங்கம் விலை கடந்த 4ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு 1,024 ரூபாய் அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 224 ஆக விற்பனையானது. இதேபோன்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 153 ஆக இருந்தது. இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கடந்த 11ந்தேதி ரூ.33,312க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த 14ந்தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.632 குறைந்து ரூ.31 ஆயிரத்து 472க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்து ரூ.33 ஆயிரத்திற்கு மேல் சென்ற நிலையில், திடீரென அதன் விலை சரிந்து முதன்முறையாக ரூ.32 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.
இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு இன்று ரூ.980 குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30,560க்கும், ஒரு கிராம் ரூ.123 குறைந்து ரூ.3,820க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோன்று வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 100 ஆக குறைந்துள்ளது